கோவில்பட்டியில் மழை வெள்ளம் அகற்றும் பணிகள்- அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆய்வு

0
65
minister news

கோவில்பட்டி இளையரசனேந்தல் ஓடை பகுதியில் மழை வெள்ள நீர் விரைந்து வழிந்தோட நகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சென்று பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி இளையரசனேந்தல் ஓடை பகுதியில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ள நீர் விரைந்து வழிந்தோட நகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி நகராட்சி இளையரசனேந்தல் ரோடு கேடிசி டெப்போ அருகில் ஓடை பகுதியில் மழை காரணமாக அதிக அளவு வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் நகராட்சி மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். ஓடை பகுதியில் நீர் தேங்காமல் விரைவில் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்சி அலுவலர் சசிகுமார், ஐகோர்ட்ராஜ், நகராட்சி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் சுரேஷ், ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வன், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அன்புராஜ், சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here