புதிய வாக்காளர் சேர்க்கும் பணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் தீவிரம்

0
70
admk news

தூத்துக்குடி நவ 21

இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாமை அறிவித்தது. அதனடிப்படையில் இன்று 21.11.2020 நடைபெற்ற சிறப்பு முகாமில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்களாக (பூத் ஏஜென்ட்) நியமிக்கப்பட்டவர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆலோசனையின் பெயரில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதனை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரையன்ட் நகர் டி.என்.டி.டி.ஏ பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் மாநகராட்சி கொறடாவுமான வக்கீல் வீரபாகு தலைமையில் பார்வையிட்டு அதிமுக முகவர்களின் பணியினை சரி பார்த்தனர்.

அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வலசை வெயிலுமுத்து, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூர்ணராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வக்கீல் சரவணபெருமாள், வட்டக் கழக செயலாளர் எஸ்.பி.பிரபாகரன், கிழக்கு பகுதி மீனவர் அணி செயலாளர் தினாவசந்த், நாகேந்திரன், வாக்குச்சாவடி முகவர்கள் சண்முகவேல், வசந்தா, பேச்சியம்மாள், மாரிச்செல்வம், ஆனந்த், தமிழரசன், தீன்குமார் உட்பட பலர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here