தூத்துக்குடியில் மீனி பிடிக்க சென்றவர், மகன்கள் கண் முன்னே கடலுக்குள் மூழ்கினார் – மெரைன் போலீஸார் தேடுகிறார்கள்

0
40
meen news

தூத்துக்குடியில் மீனி பிடிக்க சென்றவர் மகன்கள் கண் முன்னே கடலுக்குள் மூழ்கினார். அவரை மெரைன் போலீஸார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், வெள்ளப்பட்டி ஊரை சேர்ந்தவர் அந்தோணி சின்னத்துரை(43). இவருடைய மகன்கள் அந்தோணி மஹாராஜா, அந்தோணி மார்ட்டின். மூவரும் இன்று அதிகாலையில் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து அந்தோணிசின்னத்துரை தவறி கடலுக்குள் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத மகன்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அந்தோணிமஹாராஜா திடீரென கடலுக்குள் குதித்து தனது தந்தையை தேடினார்.

ஆனால் அவர் நிலை தடுமாறி தத்தளித்தார். இதை பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேறு ஒரு படகிலிருந்தவர்கள் பார்த்து , அந்தோணி மஹராஜாவை காப்பாற்றினர். ஆனால் அந்தோணி சின்னத்துரையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து தருவைகுளம் மெரைன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது காணாமல் போன அந்தோணி சின்னத்துரையை மெரைன் போலீஸார் தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here