அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடரும்! – துணை முதல்வர்

0
44
admk

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும், அர்பணிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 -ம் கட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், “2021 -ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். வெற்றி கூட்டணியான அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடரும்” என அமித் ஷா முன்னிலையிலே அறிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 -ம் கட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 -ம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here