தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0
58
crime

தூத்துக்குடி குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப்பகுதியில் தூத்துக்குடி மில்லர்புரம் என்ஜிஓ காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன்(வயது31) என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளான முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ்(28) மற்றும் அவரது நண்பர்களான முத்துக்குமார்(19), நவீன் (20), ஆரோக்கியசெல்வம்(20) ஆகியோரை கைது செய்தனர்.

இந்தவழக்கில், முக்கிய குற்றவாளியான சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதுபோன்று கடந்த மாதம் 22ம்தேதி கயத்தார் பஜாரில் கோவில்பட்டி தெற்குதிட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன்(61) அவரது மகன் பசுபதிபாண்டியன்(20) ஆகியோர் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஊர்காவலன், பசுபதிபாண்டியன் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திட இன்ஸ்பெக்டர் முத்து அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி இன்ஸ்பெக்டர்களின் அறிக்கை அடிப்படையில் 3பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில், 3பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here