தூத்துக்குடி வழக்கறிஞர் வீட்டில் ரூ.1.60லட்சம் மதிப்பிலான பறவைகள் திருட்டு

0
44
theft

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் ரூ.1.60லட்சம் மதிப்பிலான பறவைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மில்லர்புரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (57). வழக்கறிஞரான இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் வெளிநாட்டு பறவைகளை அதிகளவில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கூண்டில் அடைத்து வைத்திருந்த 13பறவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். திருடுபோன இந்த பறவைகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.

இதுகுறித்து வழக்கறிஞர் சிங்கராஜ், தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here