கோவில்பட்டியில் காவலர்களுக்கு உடல் நலம் குறித்த பயிற்சி முகாம்

0
11
WhatsApp Image 2019-07-06 at 6.41.09 PM

கோவில்பட்டி காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் தங்களது உடல் நலத்தினை பேணி சீராக வைத்து கொள்ளுவதற்கு வசதியாக உடல் நலம் குறித்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு எதிரேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமினை டி.எஸ்.பி.ஜெபராஜ் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக இயற்கை ஆர்வலர் தன்ராஜ் கலந்து கொண்டு உடல் நலத்தினை எவ்வாறு சீராக வைத்து கொள்ள வேண்டும், உணவே மருந்து என்ற அடிப்படையில் எந்த வகையான உணவினை உண்ண வேண்டும், உடலில் ஏற்படும் நோய்களுக்கு உணவினை எப்படி மருந்தாக எடுத்துக்கொள்வது என்பது குறித்து பயிற்சியில் விளக்கம் அளித்தார்.இதில் திரளான காவலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ஜெபராஜ் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here