தூத்துக்குடியில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்க தொடங்கியது !

0
20
bus stand news

மத்தியரசு தூத்துக்குடி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி ஆக தரம் உயர்த்தியது. அந்த திட்டத்தின் அடிப்படையில் நகரை அனைத்து விதத்திலும் மேம்படுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

53 கோடியில் தூத்துக்குடி நகரபகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையத்தை மாற்றி அதை சுமார்ட் பேருந்து நிலையமாக மாற்ற திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் அந்த பணி இன்று தொடங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடைக்காரர்களுக்கு தற்காலிக பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கி தரப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்று பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக அந்த பேருந்து நிலையம் அருகில் இருக்கும் எஸ்.ஏ.வி மைதானத்தை தற்காலிக பேருந்து நிலையமாக இயக்கும் பணி தொடங்கியது.

மாநில அமைச்சர் கடம்பூர் ராஜூ, இன்று பழைய பேருந்து நிலையத்தில் வைத்து சில புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த பேருந்துநிலையம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிக பேருந்துநிலையம் இயங்க தொடங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நடைபெறும் புதிய பேருந்து நிலைய வேலை சுமார் 18 மாதத்தில் முடிக்கப்படும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. அதுவரை இந்த தற்காலிக பேருந்து நிலையம் செயல்படும்.

எற்கனவே பழைய பேருந்துநிலையத்துக்கு வந்து சென்ற அத்தனை பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here