நாலுமாவடியில் ஆண்கள் ஐக்கிய சங்க கிறிஸ்து மஸ் கீத ஆராதனை!

0
102
nalumavadi news

நாசரேத், நவ.24:நாலுமாவடியில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான ஆண்கள் ஐக் கிய சங்க கிறிஸ்துமஸ் கீத ஆரா தனை நடந்தது.

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவி லான கிறிஸ்துமஸ் கீத ஆரா தனை நாலுமாவடி புதுவாழ்வு சி.எஸ்.ஐ.ஆலயத்தில் நடந்தது. சபைமன்றத்தலைவரும், நாசரேத் சேகரத் தலைவருமான ஆண்ட்ரூ விக்டர் ஞான ஒளி தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தியை கொடுத்தார்.திருமண்டல ஆண் கள் ஐக்கியசங்க இயக்குநர் ஜெப வாசகன் முன்னிலை வகித்தார்.

நாலுமாவடி சேகர குருவானவர் கிராக்ஸி பிரேம்குமார் வரவேற்று பேசினார். ஆராதனையில் திருவள்ளுவர் காலனி கிறிஸ்து ஆலயம், மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலயம், வகுத்தான் குப்பம் சேகரம் பரி.மத்தேயு ஆலயம், நெய்விளை ஆலயம், பிள்ளையன்மனை சேகரம், மூக்குப்பீறி பரி.மாற்கு ஆலயம், அகப்பைக்குளம் பரி.அந்திரே யாவின் ஆலயம், நாசரேத் தூய யோவான் பேராலயம், முதலை மொழி சேகரம், நாலுமாவடி சேகரம், இடையன்விளை ஆல யம், பிரகாசபுரம் பரி.திரித்துவ ஆலயம், வாழையடி சேகரம், உடையார்குளம் சேகரம், பழனி யப்பபுரம் சேகரம், மணிநகர் ஆலயம், திருமறையூர் மறுரூப ஆலயம், வீரமாணிக்கபுரம் ஆலயம், திரவியபுரம் பரி.லூக்கா ஆலயம், கீழவெள்ளமடம் சேகரம், கச்சனாவிளை ஆலயம் ஆகிய சபைகளின் ஆண்கள் குழுவாக சேர்ந்து கிறிஸ்துமஸ்பாடல்களை பாடினார்கள். நிகழ்ச்சியில் சேகர குருவானவர்கள் செல்வராஜ், டிக்சன், பீட்டர் தாமஸ், ஜெபவீரன், ரூபன் மணிராஜ், ஜாஷ்வா அருள்ராஜ், வேதநாயகம், ஆசீர் சாமுவேல், ஜாஷ்வா, வெஸ்லி ஜெபராஜ், சபை ஊழியர்கள் ஜெயமணி,ஞானதுரை, ஸ்டான்லி ஜாண்சன் துரை, தங்கத்துரை, அதிசயம், பிரின்ஸ், அருள்ராஜ், வனமோகன்ராஜன், சர்ச்சில், ஏசா வேதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார் பில் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன்.சி.லாசரஸ் தலைமை யில் பொதுமேலாளர் செல்வக் குமார் மற்றும் ஊழியர்கள், சேகர குரு கிராக்ஸி பிரேம்குமார், சபை ஊழியர் ஜெயமணி மற்றும் சபையினர் செய்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here