மழை வேண்டி கோவில்பட்டியில் 1மணி நேரம் தியானம் மற்றும் யோகா செய்த பள்ளி மாணவர்கள்

0
12
WhatsApp Image 2019-07-06 at 6.41.24 PM(1)

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடுஅதிகரித்துள்ளது.இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்கும் வகையில் மழை பெய்ய வேண்டியும், குடிநீர் தட்டுப்பாடு தீர வேண்டியும், இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், விவசாயிகள் வாழ்வு செழிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோவில்பட்டி சுபா நகரில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் ஆலோசகர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் யுவராஜன் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் ஆண்டாள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.கே.வி மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் சங்கர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 1மணிநேரம் தியானம் மேற்க்கொண்டனர்.. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பத்மசானம் முதல் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர். இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மகேஷ் குமார், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவன தலைவர் முருகன், செயலாளர் தங்க மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டிராஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here