திருச்செந்தூர், நவ. 24
நடிகர் ரஜினிகாந்த் முழு ஆரோக்கியத்துடன் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ரசிகர்களிடையே ரஜினி, அரசியலுக்கு வருவேன் என கூறியிருந்தார். இது அவரது ஆதரவர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடவில்லை. அடுத்து வரும் சட்டசபை தேர்தல் இலக்கு என நடிகர் ரஜினி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி திருச்செந்தூரில் தூண்டுகை விநாயகர் கோயில் அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் சண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பூரண நலத்துடனும், முழு ஆரோக்கியதுடனும் அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்றவும், எதிரிகளின் தொல்லை நீங்கவும் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் நடத்தப்பட்டது. மலையாள கிருஷ்ணமூர்த்தி தீட்ஷிதர் தலைமையில் முத்துசுப்பிரமணியன், முத்துராமன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சுந்தரராமன் 300 நாமவழி சொல்லி சிறப்பு யாகத்தை நடத்தினர். இந்த யாகத்தை மாவட்ட வர்த்தகரணி இணை செயலாளர் பொன்.முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் தவமணி, மாவட்ட துணை செயலாளர் தீரவாசகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கந்த சிவசுப்பு, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட மீனவரணி செயலாளர் அருண்ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், ஒன்றிய இணை செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் நடேஷ், தூத்துக்குடி மாநாகர இளைஞரணி செயலாளர் ஜெயபால், உடன்குடி ஒன்றிய செயலாளர் முருகானந்தம், இணை செயலாளர் காமராஜ், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜோசப், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் முருகன்,
தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மேகலா பழனி முருகன், கிழக்கு மண்டல இணை செயலாளர் அந்தோணி பிச்சை, துணை செயலாளர் அசோக்ராஜ், திருச்செந்தூர் வடிவேல், அந்தோணி, ஜோசப், சிவசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், ஆறுமுகநேரி சோமு, காமராஜ், லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.