சாத்தான்குளம், நவ.24:
சாத்தான்குளம் அருகே சாலை அமைத்து ஒரே ஆண்டில் சேதமானது குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட இரட்டைகிணறு கிராமத்தில் இருந்து நெல்லை மாவட்டம் இட்டமொழி செல்லும் சாலை கடந்த ஆண்டு மழைக்கு சேதமானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் இட்டமொழி, அழகப்பபுரம் பகுதிகளுக்கு சென்று திரும்ப மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் இந்த சாலை கருமேனி ஆற்றோரம் செல்வதால் அதில் தரைப்பட்ட பாலமும் அமைத்து புதியதாக சாலை அமைக்க கிராமமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இரட்டைகிணறு கிராமத்தில் இருந்து இட்டமொழி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தூரம் புதியதாக சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இட்டமொழி உள்ளிட்ட இதர பகுதிகளுக்கு எளிதில் சென்று திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 2நாள்களுக்கு முன்பு இரட்டைகிணறு பகுதியில் இருந்து லாரி சென்றுள்ளது. அதில் சாலையானது திடீரென சேதமானது. சாலை அமைத்து ஒரே ஆண்டில் சாலை சேதமானது கிராம மக்களிடையை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் மழை நீர் வடிந்தோடும் போது சாலை மேலும் சேதமடைய கூடும் என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆதலால் இது தொடர்புடைஅதிகாரிகள் பாரிவையிட்டு சாலையானது முழுவதும் சேதமாவதற்குள் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.