தூத்துக்குடி : கடல் பகுதியில் ரூ.500 கோடி ஹெராயின் கடத்தல் – ஸ்ரீலங்கன் 6 பேர் கைது

0
148
crime news

தூத்துக்குடி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கடலில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகு சென்றது. அதை வழிமறித்து சோதனையிட்டனர் இந்திய கடலோர காவல்படையினர். படகில் ரூ.500 கோடி சர்வதேச மதிப்பு கொண்ட 100 கிலோ ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் இலங்கையை சேர்ந்த 6 பேர் இருந்தனர்.

6 பேர்களையும் பிடித்த இந்திய கடலோர காவல்படை, போதைப்பொருளுடன் படகையையும் கைப்பற்றி தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தூத்துக்குடியில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெராயின் தூத்துக்குடி கடல்பகுதியில் வைத்து இலங்கைக்கு வேறு படகில் மாற்றி விடப்பட்டிருக்கும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

எனவே மத்திய, மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மத்திய, மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஆயுத கப்பல் இதே கடல்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையினரால் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here