தீப்பெட்டி தொழிலுக்கு வரிச்சலுகை பெற நடவடிக்கை – முதல்வர் அனுமதியுடன் குழு அமைத்து – மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளேன் – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ

0
9
WhatsApp Image 2019-07-06 at 6.41.41 PM

கோவில்பட்டி நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு கேட்டவர்களுக்கு பணி உத்தரவு வழங்கும் விழா, நாடார் மேல்நிலைப்பள்ளியில் 556 மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, பாண்டவர்மங்கலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய குடிநீர் இணைப்புக்கான பணி உத்தரவுகளை வழங்கி பேசினார்.திட்ட இயக்குநர் தனபதி, நகராட்சி ஆணையாளர் அச்சையா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் .பரமசிவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாடார் மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் ஆண்டுகளில் கணக்குப்பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தெரிவித்தனர். உங்களது கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களுக்கானது இல்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு தான் என திமுக ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். பட்ஜெட் முழு சாராம்சம் வந்த பின்னர் தான் அதை பற்றி கருத்து சொல்ல முடியும். ஆனாலும், பெரும்பாலான மக்கள், கட்சியினர் வரவேற்றுள்ளனர். பாராளுமன்றத்தில் இது பெரிதாக பிரதிபலிக்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்ஜெட்டாக இருந்திருக்கிறது,

தீப்பெட்டி தொழிலில் தீக்குச்சிக்கு 12 சதவீதம் வரியிலிருந்து 4 சதவீத வரியை குறைத்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இருந்த தமிழக அரசுதான்.தீப்பெட்டி தொழில் பிரச்சினை என்பது எனது தொகுதி சார்ந்த பிரச்சினை. பாரதிய ஜனதா அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் நான் முதல்வரின் அனுமதி பெற்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தீக்குச்சி கம்பெனி உரிமையாளர்கள் குழுவை அழைத்து கொண்டு டெல்லி சென்று, தீப்பெட்டி தொழிலுக்கு வரிச்சலுகை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளேன்.

பெட்ரோல், டீசல் விலை என்பது குரூட் ஆயில் விலையை பொறுத்தே மாறுகிறது. உலக அளவில் இதன் விலை குறையும் போது, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆய்வுக்கூட தமிழக அரசு அனுமதிக்காது,திமுக தலைமையில் இருந்த அரசுதான் ஆய்வுக்கு அனுமதி கொடுத்துள்ளது,இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here