தருவைகுளம் மீனவர்களை எம்.எல்.ஏஅனிதாராதாகிருஷ்ணன் சந்திப்பு

0
19
anitharadahkrishnan

மினிகாய் தீவு கடற்பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் படகுடன் நேற்றிரவு கரை திரும்பினர். அவர்களை இன்று காலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுபாளர் அனிதாராதாகிருஷ்ணன் மற்றும் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் ஊரிலிருந்து கடந்த 18ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லைதாண்டியதாக மினிகாய் தீவில் பிடித்து வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக அரசியல் கட்சியினர் மத்திய மாநில அரசுகளுக்கு உந்துதல் செய்தனர். அதனடிப்படையில் அரசுகள், ஜரூராக செயல்பட்டு சிறைவைக்கப்பட்ட 10 மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளையும் மினிகாய் தீவு நிர்வாகம் விடுவித்தது. இதனையடுத்து அவர்கள் நேற்றிரவு வீடு திரும்பினர்.

இந்தநிலையில் தருவைகுளம் திரும்பிய மீனவரக்ளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையை ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தலமைசெயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன்,

ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்ம ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் மிக்கேல்நவமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதிராஜா,தருவைகுளம் அந்தோணி சர்ச்சில், ராபின் ஞானபிரகாசம், தங்கத்துரை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here