இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 374 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரிரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரிலேயாவில் தொடங்கியது. முதல் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 374 ரன் களை குவித்தது. இந்த அணியின் கேப்டன் ஆரோன்பின்ஞ் 114 ரன் களும், ஸ்டீவ்ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் முகமதுசமி 3 விக்கெட்கள் எடுத்தார். அடுத்து இந்திய அணி பேட் செய்து வருகிறது.