கடலுக்கு போகும் தண்னீரை சாத்தான்குளம் குளங்களுக்கு திருப்பிவிட ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை

0
43
uoorvasi amirtharaj news

கடலுக்கு போகும் தண்னீரை சாத்தான்குளம் பகுதியில் உள்ள வைரவம் தருவை, புத்தன் தருவை ஆகிய குளங்களுக்கு திருப்பிவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி.S. அமிர்தராஜ் தலைமையில் காங்கிரஸார் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், ’’ஸ்ரீவைகுண்டம் தொகுதி சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 பஞ்சாயத்து கிராமங்களின் நீராதாரமாக விளங்கும் வைரவம்,தருவை, புத்தன் தருவை குளமாகும். இந்த குளங்களானது மணப்பாடு, பெரியதாழை ஆகிய இடங்களில் உள்ள கடல்நீர் சாத்தான்குளம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உட்புகாமல் இருப்பதற்கும் தட்டார்மடம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் வாழ்வாதாரமாகவும் ஆடு,மாடுகளின் நீர் வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த குளத்திற்கு பாபநாசம் அணையின் மூலம் தாமிரபரணி ஆற்றின் மருதூர் மேலக்கால் மூலம் சடையநேரி கால்வாய் வழியாகவும் வைரவம் தருவை, புத்தன் தருவை விரிவாக்க கால்வாய் வழியாகவும் இந்த இரு குளத்திற்கும் தண்ணீர் விட வேண்டும்.

தற்போது பருவையின் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் உயரும் அளவுக்கு இல்லை. பருவமழை பெய்யும் காலங்களில் தாமிரபரணி ஆற்று நீர் வீணாக கடலுக்குத்தான் செல்கிறது. கடந்த வாரங்களில் பெய்த பருவமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் வீணாக கடலுக்கு சென்றது. ஆகவே தற்போது பாபநாசம் அணைக்கட்டில் 143 அடிக்கு 128.90 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மருதூர் மேலக்கால் வழியிலுள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டன.

ஆதனால் தாங்கள் தயவு கூர்ந்து பாபநாசம் அணையை திறந்து கடைமடை பகுதியிலுள்ள வைரவன் தருவை, புத்தன் தருவை குளங்கள் நிறையும் வரை தண்ணீர் விட்டு இப்பகுதி மக்களின் நீர்வாழ்வாதாரத்தை பெருக்கவும்,குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கவும், அணையை திறந்து கடைமடை பகுதியில் உள்ள இந்த இரு குளங்களையும் நிறைத்து இப்பகுதி மக்களின் வறண்ட நிலையை போக்கிப் போக்கி பசுமைநிலையை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனம், வட்டார துணை ஒருங்கிணைப்பாளர் சங்கர், தெற்கு வட்டார தலைவர் லூர்து மணி, வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி, மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன் கிழக்கு வட்டார தலைவர் வி.எம்.சுதாகர். ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் சித்திரை, மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் இசை சங்கர், EX. OBC மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, தொழிலாளர் பிரிவு தலைவர் ஆடிட்டர் சிவ் ராஜ்மோகன், ஊடகப் பிரிவு தலைவர் முத்துமணி கருங்குளம் சுந்தர்ராஜ், காங்கரஸ் எடிசன், பண்ணை விளை சாமுவேல் ஆகியோர் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here