ஸ்ரீவைகுண்டம் புதிய தாலுகா அலுவலக துவக்க விழா

0
34
Capture

ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டுமானப்பணிகள் எல்லாம் நிறைவுபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக புதிய தாலுகா அலுவலகத்தினை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தின் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.வீரப்பன் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சிம்ரன்ஜித்சிங்கலோன் முன்னிலை வகித்தார். தாசில்தார் சந்திரன் வரவேற்றார். விழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய தாலுகா அலுவலகத்தினை குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டார்.
இதில், சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கரநாராயணன், துணை தாசில்தார்கள் சுந்தரராகவன், சங்கரநாராயணன், பேச்சிமுத்து, சிவக்குமார், சேகர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், கிராம உதயம் தனிஅலுவலர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராஜப்பாவெங்கடாச்சாரியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திங்கட்கிழமை முதல் தாலுகா அலுவலகத்தின் அனைத்துப்பணிகளும் புதிய அலுவலக கட்டிடத்தில் செயல்படும் என தாசில்தார் சந்திரன்  தகவல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here