தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களால் தாக்கப்பட்ட மனநலன் பாதிக்கப்பட்ட நபர் இறந்தார் !

0
49
grime news

தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்களால் தாக்கப்பட்ட மனநலன் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி அருகே கே.வி.கே சாமி நகரை சேர்ந்தவர் ஐயாத்துரை மகன் பாலமுருகன்(35). இவருக்கு முருகேஸ்வரி என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

பாலமுருகனுக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாம். அதனால் அவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். பல்வேறு வழியில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. பேய் கோளாறுக்கும் கூட மாந்திரீக காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள சாலையில் போகிறவர்கள் வருகிறவர்களை தடுத்து பாலமுருகன் தகராறில் ஈடுபட்டார். சிலரை கல்லால் அடித்ததாகவும் சிலரை கடித்துவிட்டதாகவும் சிலர் எதிர்த்து அவரை தாக்கிதாகவும் சொல்கிறார்கள்.

இந்த களேபரத்துக்கு நடுவே பாலமுருகன், அந்த பகுதி சுவர்களில் ஏறி குதித்திருக்கிறார். அப்போது சுவரில் பதித்திருந்த கண்ணாடி பீங்கான் இவர் உடலில் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரத்த காயம் ஏற்பட்ட கீழே விழுந்திருக்கிறார். இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி அளிக்க முயன்றபோது அவர்களிடம் மல்லுகட்டிய பாலமுருகன், அந்த வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து உடைத்திருக்கிறார்.

தகவலறிந்து மேலும் ஒரு ஆம்புலன்ஸ் அங்கு வந்திருக்கிறது. அதிலிருப்போரும் சேர்ந்து பாலமுருகனை கட்டி தூக்கி சென்றிருக்கிறார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதன் விளைவாக பாலமுருகன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் இறந்து போனார்.

இது குறித்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here