தூத்துக்குடி நவ -30:
கொல்லுப்பட்டறை நடத்தி வரும் தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்கப்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்ம சமுதாய மகாஜன பேரவையினர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘’எமது சமுதாயத்தை சார்ந்த திருச்செந்தூர் தாலுகா குரும்பூர் அங்கலமங்கலம் கிராமம் வேளாண் தெருவைச் சார்ந்த சப்பானிமுத்து ஆச்சாரி மகன் நாராயணன் ஆச்சாரி வயது 68 என்பவர் பாரம்பரி குலதொழிலான கொல்லுப்பட்டறையை(மூன்று) தலைமைறையாக நடத்தி வருகிறார்.
கடந்த 23.11.2020 அன்று காலை 11 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையம் அதிகாரிகள் தொழில் செய்யும் கொல்லுப்பட்டறைக்கு வந்து குற்றவாளிக்கு ஆயுதம் தயாரித்து கொடுத்துள்ளீர்கள் என்று மிரட்டி அடித்து கொடுமைப்படுத்தினர். பாதிக்கப்பட்ட நாராயணன் ஆச்சாரி அலறி துடித்துள்ளார். முதியவர் என்று பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளனர். நாராயணன் காவல் அதிகாரிகளிடம் ஐயா நான் விவசாயம் வேலைக்கான கருவிகள் மற்றும் நூறு நாள் சேலைக்கான கருவிகள் மட்டுமே செய்து கொடுத்துள்ளேன் என்று கூறி மன்றாடியுள்ளார்.
அதை காதில் வாங்காமல் அதன் பின்பு குடும்பூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்நிலையத்தில் வைத்து முதியவர் என்று பாராமல் பலப்பிரயோகம் செய்து இனி இந்த கொல்லு பட்டறை தொழில் செய்தால் உன் கையை ஒடித்துவிடுவேன் என்று வாழ்வாதாரமான கொல்லுப்பட்டறை நடத்தி வரும் நலிவடைந்த தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து காவல்நிலையத்தில் பொய் வழக்கு போடுவதை தடுக்கப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள விஸ்வகர்மா(ஆச்சாரி) சமுத்தாயத்தை சட்ட விழுப்புணர்வு இல்லாத காரணத்தால் எளிதாக குற்றவாளிகளாக சிக்க வைக்கப்படுகின்றார்கள். தாங்கள் உண்மை நிலை கண்டறிந்து நலிவடைந்த விஸ்வகர்ம சமுதாயத் தொழிலாளர்களை காப்பாற்றி சட்ட வழிமுறைகளை தெரியப்படுத்தி மேலும் நராயணன் என்பவருக்கு இனிமேல் துன்புறுத்தல் நடக்காதவாறும் இனிவரும் காலங்களில் பாரம்பரிய தொழில் செய்து வரும் விஸ்வகர்மா சமுதாய மக்களை துன்புறுத்தாமல் வரைமுறை படுத்தி முதியவரை தாக்கிய திருவைகுண்டம் காவல்நிலைய காவலர்கள் மீதும் குடும்பூர் காவல்நிலையை காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.