நாசரேத்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா! அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!

0
153
anitha news

நாசரேத்,டிச.01:நாசரேத்தில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல.ஏ., வழங்கினார்.

நாசரேத்தில் உதயநிதி 43-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.நாசரேத்தில் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் 43-வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஏ.டி.கே.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருச்செந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதி யையும் தி.மு.கவை வெற்றிபெற செய்து ஸ்டாலினை முதல்வராக் க வேண்டும் என்றும்,நம் கட்சிகா ரர்கள் தோழமை கட்சி காரர்களு டன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பேசி தொண்டர்களை உற்சாகபடுத்தும் விதமாக நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்சியில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கா், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், ஒன்றிய செயலாளர் இசக்கிப் பாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கிருபாகரன், நகர செயலாளர் ரவி செல்வகுமார், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பேரின்பராஜ், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் சுடலைமுத்து, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோதி டேவிட், கச்சனாவிளை செயலா ளர் ராமானுஜம், ஆழ்வை ஒன் றிய அவை தலைவர் சௌந்தர் ராஜன், நாசரேத் நகர அவைத் தலைவர் அருள்ராஜ், மூக்குப் பேறி செயலாளர் அருள், மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, அன்பு சாமுவேல், முருகதுரை, கருத்தையா, ஏகோவாகான், வார்டு செயலாளர்கள் உடையார்,

ஞானராஜ்,ஜேம்ஸ்ரவி, சரவணன், சிலாக்கியமணி, தேவதாசன், தாமரை செல்வன், மனோகரன், சீனி, சேகர், ஹரிஸ் ரவி, அதிசய மணி நல்லதுரை, மாற்கு ஜாண் சன், சிமியோன், ஜஸ்பர், நகர தொழில்நுட்ப பிரிவு அமைப் பாளர் ராஜ்குமார், ஒன்றிய மகளி ரணி அமைப்பாளர் இந்திராணி, நகர மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி, ஞானராஜ்,ஸ்டீபன் ஞானதுரை, நகர இளைஞரணி செயலாளர் பிரதீப்,அப்பாத்துரை மற்றும் ஆபிரகாம் ராதா,ஜம்பு, தங்கவேல்,ஏசாதுரை, அருளா னந்தம்,ராஜ் மற்றும் ஏராளமான கழக தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here