தூத்துக்குடியில் 9 புதிய பேருந்துகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ இயக்கி வைத்தார் !

0
67
bus news

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி சமீபத்தில் ஏற்கனவே இயக்கி வரும் வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

அந்த பேருந்துகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மீண்டும் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 9 பேருந்துகளை இயக்கி வைத்தார்.

தூத்துக்குடியிலிருந்து திருப்பூருக்கு 2, தூத்துக்குடி – கரூர் க்கு 1, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி இடையே இயக்க கூடியது 3, கோவில்பட்டி – மதுரை 1, விளாத்திகுளம் – மதுரை 1, கோவில்பட்டி – திருச்செந்தூர் 1 ஆக மொத்தம் 9 புதிய பேருந்துகள் இன்று முதல் இயங்க தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here