கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சரணடைவார் ?

0
22
saravanapavan

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபால் இன்று சரணடைய கெடுவிதிக்கப்பட்ட நாளாகும்.எனவே அவர் இன்று சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்ல உலகில் பல இடங்களில் கிளைகளை கொண்டது சரவணபவன் ஓட்டல். இதன் உரிமையாளர் ராஜகோபால். இவர் தூத்துக்குடி மாட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில், இவரிடம் மேலாளராக பணி புரிந்தவருடைய மகள் ஜீவஜோதியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.

அதற்குள் ஜீவஜோதி, பிரின்ஸ்சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் முயன்று பார்த்த ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமாரை தீர்த்துகட்ட திட்டம் போட்டார்.அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு கொடைக்கானலில் வைத்து சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார்.

இதை ராஜகோபால் மறுத்தார். ஆனாலும் சாந்தகுமாரை கடத்தியவர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் ராஜகோபாலை சிக்க வைத்தது. இந்த வழக்கும் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் நடந்தது.

அந்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் 55 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடுசெய்தார். இதில் 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டு விசாரணைக்கு பிறகு உயர்நீதி மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அவர் ஜூலை 7-ம் (அதாவது இன்று) தேதிக்குள் சரணடையவும் கெடுவிதித்தது.

அதனால் இன்று ராஜகோபால் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here