தூத்துக்குடி T.சவேரியார் புரத்தில் புனித சவேரியார் ஆலய திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவானது பத்து நாட்கள் கொண்டாடப்பட்டது ஒன்பதாம் திருவிழா காலை சிறுவர் சிறுமியர்களுக்கு பேரருட்திரு சகாயம் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
மேலும் பத்தாம் திருவிழாவான இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா சிறப்பு ஆடம்பர திருப்பலியும் சிறுவர் சிறுமியருக்கு உறுதிப்பூசுதல் வழங்கும் விழாவும் அதனைத்தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெற்றது ஆயர் ஸ்டீபன் தலைமையில் அருட்தந்தை ஜஸ்டின் மண்ணின் மைந்தர், அருட்தந்தை கிங்ஸ்டன் மண்ணின் மைந்தர், அருட்தந்தை வினித் ராஜா மண்ணின் மைந்தர் மேலும் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பு செய்தனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து சப்பர பவனியும் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வுகளை பங்குத்தந்தை ஜேசு நசரேன் மற்றும் அருட்சகோதரிகள் ஊர் நிர்வாகிகள் இறைமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.