ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்ளையார் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் கருப்பசாமி, நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், கருங்குளம் யூனியன் துணைசேர்மன் லெட்சுமணப்பெருமாள், ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைரணி செயலாளர் சிங்கப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், பொன்ராஜ், எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் மோகன், சேர்மதுரை, துரை, நகர பொருளாளர் ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் பிச்சையா, அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க எட்வர்டுஅந்தோணிராஜ், திருப்பதி, பார்வதி, வார்டு செயலாளர்கள் இருளப்பன், திருமால் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாநகர பகுதி அதிமுக சார்பில் நகரின் முக்கிய இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதுபோன்று, ஸ்ரீவைகுண்டம் நகர அமமுக சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச்செயலாளர் சிவராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில், ஜெ..பேரவை நகர செயலாளர் வெல்டிங்முருகன், இணை செயலாளர் சங்கரலிங்கம், நகர துணை செயலாளர் கருப்பசாமி, அமைப்புசாரா ஒன்றிய செயலாளர் கொம்பையா, தகவல் தொழில்நுட்ப அணி பழனி, நிர்வாகிகள் ஆதிச்சநல்லூர் மாலை, இசக்கிபாண்டியன், கோமு,, ராமன், மகேஷ்குமார், சிங்கப்பன், வள்ளிநாயகம், நங்கைராஜா, பரமசிவன், பொன்பாண்டியன், முருகன், சுடலைமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.