திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 திரிசுதந்திரர்களுக்கு 2 மாதம் கோயிலுக்குள் நுழைய தடை – செயல் அலுவலர் அதிரடி

0
111
thiruchendur murugan

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் பக்தர்களை கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி பணம் கேட்டது மற்றும் கோயில் பிரகாரத்தில் அனுமதியின்றி பிரசாதம் விற்றதாக இரு திரிசுதந்திரர்களை கோயிலுக்குள் நுழைய ஒரு மாதம் தடைவிதித்து கோயில் செயல் அலுவலர் அம்ரித் உத்தரவிட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது அறநிலையத்துறை ஆணையருக்கு புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் கோயில் செயல் அலுவலர் அம்ரித் கோயில் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில் சண்முகவிலாச பகுதியில் கோயில் திரிசுதந்திரர் தெற்குரதவீதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சோமாளி அரிகரன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி வற்புறுத்தி பணம் கேட்டதாக நேரில் சிக்கினார். அவரை செயல் அலுவலர் அம்ரித் நேரில் எச்சிரிக்கை செய்தார்.

இதே போல் கோயில் பிரகாரம் பெருமாள் சன்னதி அருகில் சந்தனம் தேய்க்கும் அறைக்கு முன்பாக ஆய்வு செய்த போது, திருச்செந்தூர் தெற்கு ரதவீதியை சேர்ந்த மடப்பள்ளி மற்றும் சந்தன முறைதாரரும் சுப்பிரமணியன் கோயில் நிர்வாகம் அனுமதியின்றி பிரசாதம் என்ற பெயரில் பொங்கல் கட்டிகளை வியாபார நோக்கோடு விற்பனை செய்ததாக நேரில் கண்டறியப்பட்டார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து பொங்கல் கட்டிகள் அகற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் அத்துமீறி செயல்படும் இரண்டு திரிசுதந்திரர்களையும் ஒரு மாத காலத்திற்கு கோயில் வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஆய்வு செய்ய உள்துறை சூப்பிரெண்ட்டுகளுக்கு கோயில் செயல் அலுவலர் அம்ரித் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here