நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா!

0
130
nazareth news

நாசரேத்,டிச.20:நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா பேராயர் தேவசகாயம் தலைமையில் நடைபெற்றது.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ்விழா தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப்பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம் தலைமையில் நடைபெற்றது.நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைக் குருவா னவரும்,கனோன் ஆர்தர்மர்காஸ் சபைமன்றத்தலைவருமான டாக்டர் எஸ்.எட்வின் ஜெபராஜ் ஆரம்ப ஜெயம் செய்து விழாவினை துவக்கி வைத்தார். தாளாளர் ஏ.ஆர். சசிகரன் வரவேற்று பேசினார். திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் டாக்டர் எஸ்.சைலஸ் சற்குணம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேராயர் கிறிஸ்துமஸ்செய்தி கொடுத்து ஆசி வழங்கினார்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நாசரேத் காவல்நிலைய ஆய்வாளர் எஸ். சகாயசாந்தி,சாத்தான்குளம் காவல்நிலையஆய்வாளர் எஸ்.ஸ்ரீதர்,தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன்,கல்வி நிலவரக்குழு செயலாளர் ஜெ. ஜெபச்சந்திரன் கலந்து கொண்டனர்.

கல்லூரி கிறிஸ்துமஸ் விழாவில் திருமண்டல நிர்வாகக்குழுஉறுப்பினர்கள் கிறிஸ்டோபர் ஜெயக்குமார்,திணேஷ் திருமண்டல பெரு மன்ற உறுப்பினர்கள் செல்வின்,ஆண்ட்ரூஸ்,மற்றும் பேராசிரியர் ஜெயச்சந்திரன், ரத்ன குமார், செல்வின், புஷ்பராஜ், கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் மாணவ, மாணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முடிவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.ஜெயக்குமார் நன்றி கூறினார். நிறைவாக மாணவ, மாணவிகளின் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here