12 கி.மீ தூரத்தை 1 மணி 22 நிமி டத்தில் கடந்த மாணவனை பாராட்டி நிதிவுதவி செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

0
79
thoothukudi collector news

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. அந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து நமது மாவட்டம் முழுவதும் 60000 மரக்கன்றுகள் கொண்டு குறுங்காடுகள் வளர்க்கும் திட்ட பணிக்கு வழங்கப்பட்டது.

குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மோட்டார் பொறுத்திய சக்கர நாற்காலிகள் வழங்கினார். மகளிர் திட்டத்தின் மூலம் 69 நபர்களுக்கு தலா ரூ.25000 மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கினார்.

12 கி.மி. தூரத்தை 1 மணி 22 நிமிடத்திலே கடந்து தேசிய அளவில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளசுதன் என்ற 6 வயது மாணவனை பாராட்டி ஆதவா அறக்கட்டளை வழங்கிய ரூ.10000த்தை வழங்கி சிறப்பித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் சட்ட பட்டதாரிகள் ரூ.50000 தொழில் ஊக்கத்தொகை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு 7.5 சதவிதம் திட்டத்தில் தேர்வான தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ஆதவா அறக்கட்டளையினர் வழங்கிய தலா ரூ.25000 பரிசுத் தொகையினை வழங்கினார். தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நூலகங்களுக்கு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here