மாப்பிள்ளையூரணியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கேற்றி துவக்கி வைத்தார்

0
64
admk news

தூத்துக்குடி, டிச.9:

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்துவைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்து விளக்கு ஏற்றி பணிகளை இன்று (09.12.2020) துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

துணை இயக்குநர் அலுவலகம் துணை இயக்குநர் அறை, அலுவலக அறை, தாய் சேய் அறை, மாற்றுத்திறனாளிகள் ஓய்வு அறை, இளநிலை பூச்சி இயலாளர் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 4917 சதுர அடி பரப்பளவில் ரூ.112 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய அலுவலகத்தினை 11.11.2020 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்துவிளக்கு ஏற்றி பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலீலா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (மருத்துவபிரிவு) வெள்ளைளைச்சாமிராஜ், உதவி பொறியாளர்கள் அன்புராஜ், வித்யாசாகர் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here