வாக்காளர் பெயர் சேர்க்கும் 2ம் கட்ட முகாம் – அதிமுகவினர் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் – எஸ்.பி. சண்முகநாதன் வேண்டுகோள்

0
49
shanmuganathan

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் 2021 சிறப்பு முகாமை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த நவம்பர் 21, 22 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் சேர்க்கும் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

தற்போது 2ஆம் கட்ட சிறப்பு முகாம் வரும் டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவிப்பிற்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்களாக( பூத் ஏஜெண்ட்) நியமிக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் அதிமுக முகவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை முதல் மாலை வரை மேற்காணும் பணிகளுக்காக வருகை தரும் பொது மக்களுக்கு உரிய படிவங்களை பெற்று தந்தும், பூர்த்தி செய்து கொடுத்தும் உதவக்கூடிய வகையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த களப் பணியில் ஈடுபடவேண்டும்.

மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகள், கழக சார்புகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு இதனை வாய்ப்பினை தெரியப்படுத்தி புதிய இளம் வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்கும் வகையில் தங்களை முழுவீச்சில் இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மேற்காணும் நாட்களில் அவரவர்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு எஸ்.பி. சண்முகநாதன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here