காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையினருக்கு 13.12.20 அன்று எழுத்து தேர்வு

0
132
thoothukudi s.p

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

2020-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர், (ஆண் மற்றும் பெண்) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்), மற்றும் மூன்றாம் பாலினம் ஆகியோர் அடங்கிய விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை எழுத்துதேர்வு நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் (1) B.M.C மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி.- 628008, (2) வ.உ.சி (V.O.C)கல்லூரி வளாகம், மில்லர்புரம், தூத்துக்குடி – 628008 (3) செயின்ட் தாமஸ் (St. Thomas Higher Sec. School) மேல்நிலைப் பள்ளி, இன்னாஞ்சியார்புரம், தூத்துக்குடி – 628002 (4) காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, (தருவைமைதானம் அருகில்) தூத்துக்குடி-628003, (5) காமராஜர் கல்லூரி மற்றும் காமராஜ் பள்ளி, திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி – 628003 (6) ஸ்பிக் மேல் நிலைப்பள்ளி, முத்தையாபுரம், தூத்துக்குடி (7) சாண்டி பாலிடெக்னிக் மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி முத்தையாபும், தூத்துக்குடி

(8) T.D.T.A.P.S பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை, தூத்துக்குடி- 628103 (9) அன்னை தெரசா பொறியியில் கல்லூரி, (St. Mother Teresa Engineering College) வாகைக்குளம் தூத்துக்குடி – 628102. (10) ஜி.யு. போப்ஸ் கல்லூரி (G.U. Pope’s College), சாயர்புரம், தூத்துக்குடி மாவட்டம் (11) சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் அருகில், தூத்துக்குடி -628003 (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)

(12) செயின்ட் பிராசிஸ் சேவியர்ஸ் & லயோலா (St. Francis xaviers & Loyola Hr. Sec. School) மேல்நிலைப்பள்ளி, சின்னக்கோவில் காம்ப்ளக்ஸ். தூத்துக்குடி (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) (13) புனித மேரி (St. Marys Women’s College) பெண்கள் கல்லூரி, கடற்கரை சாலை, (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் எதிரில்) தூத்துக்குடி- 628001 (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) ஆகிய 13 தேர்வு மையங்களில் மொத்தம் ஆகிய தேர்வு மையங்களில் மொத்தம் 16134 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் வாட்ச் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்பொழுது அழைப்புக் கடிதம், அடையாள அட்டை, பரிட்சை அட்டை (Writing Pad), கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா (Ball Point Pen) கொண்டு வரவேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி சுப்பையா, அலுலக கண்காணிப்பாளர் மயில்குமார், கணேசபெருமாள் உட்பட அமைச்சுப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here