பேய்க்குளம் அருகிலுள்ள பழனியப்பபுரத்தில் புது வாழ்வு பெருவிழா! 3 நாள்கள் நடந்தது!!

0
49
Capture

நாசரேத்ஜுலை.08:பேய்க்குளம் அருகிலுள்ள பழனியப்பபுரத்தில் புது வாழ்வுப் பெரு விழா 3 நாள்கள் நடந்தது.
பேய்க்குளம் அருகிலுள்ள பழனியப்பபுரம் இரட்சண்யப்பேழை ஊழியங்கள் சார்பில் ஏழாவது புது வாழ்வுப் பெருவிழா பழனியப்பபுரம் கர்த்தரின் தோட்டத்தில் 3 நாள்கள் (வெள்ளி சனி ஞாயிறு ) நடைபெற்றது. காலை 10 மணிக்கு விடுதலை உபவாச ஜெபம் நடைபெற்றது. ஞாயிறுகிழமை காலை 9:30 மணிக்கு பேய்க்குளம் கர்மேல் பர்வதத்தில் துதி ஆராதனை நடைபெற்றது. தினமும் மாலை 7 மணிக்கு புது வாழ்வுப் பெருவிழா கூட்டங்கள் துவங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.
புதுவாழ்வுப் பெருவிழா கூட்டங்களில் சென்னையைச் சேர்ந்த புதிய வாழ்வு மகிமையின் சபை போதகர் ஜி.வி.சரவணன் தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்த னையை ஏறெடுத்தார். பாடல்களை ஸ்டீபன் ஜெபராஜன் குழுவினர் பாடினர். பென்னி குழுவினர் இன்னிசையை மீட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பழனியப்பபுரம் இரட்சண் யப்பேழை ஊழியங்களின் நிறுவனர் எஸ்.பால்ராஜ் ஜேசுதாஸ்சகோதரி கவிதா பால் ராஜ் ஆகியோர் தலைமையில் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் றி.அமிர்தராஜ்றி.டேனி யல்றி.யாக்கோபு மற்றும் விசுவாசிகள் செய்திருந்தனர்.இக்கூட்டங்களில் பேய்க்குளம் பகுதியிலுள்ள சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here