மேலவெள்ளமடம் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த இந்து முன்னணி கோரிக்கை !

0
208
nazareth

நாசரேத்,டிச.15:

மேலவெள்ளமடம் நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் எஸ்.வெட்டுபெருமாள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

’’தூத்துக்குடி மாவட்டம்,ஆழ்வார்திருநகரி ஒன்றி யத்திற்குட்பட்ட மேல வெள்ளமடம் கிராமத்தில் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு வரை கடந்த 25 ஆண்டுகளாக சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு தேறிய மாணவ,மாணவிகள் 9-ஆம்வகுப்பு செல்வதற்கு சுமார் 6 கி.மீ.தூரமுள்ள நாசரேத்திற்குத்தான் நடந்து வரவேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் குப்பாபுரம்,வைத் திலிங்கபுரம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்களின் குழந்தைகள் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்படுகிது.

பலர் கல்வியை இத்துடன் நிறுத்திக்கொள் வேண்டிய துர்ப்பாக் கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.எனவே தமிழக முதல்வர் கருணை கூர்ந்து ஏழைகளின் குழந்தைகளின் வாழ்வில் கல்விக்கண் திறக்க மேல வெள்ளமடம் நடுநிலைப்பள்ளியை,உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ட ஆவண செய்ய வேண்டுகிறேன்’’ என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here