தூத்துக்குடி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைவுபடுத்த தமாகா கோரிக்கை

0
264
sdr.vijayaseelan

தூத்துக்குடி, டிச.16:

தூத்துக்குடி மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திலான பஸ் நிலையம் கட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்திடவேண்டும் என்று தமாகாவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி வி.இ.ரோட்டிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை வகித்தார். ஆழ்வை வட்டார தலைவர் கீரனூர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரப்பகுதிகளில் மழையின் காரணமாக தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் மழைநீர், கழிவுநீரை மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக அகற்றிடவேண்டும், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகரில் நடைபெற்று வரும் பழைய பஸ் நிலைய கட்டுமானப்பணி மற்றும் சாலைகள் அமைத்தல், நடைபாதை வசதி, மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற திட்டப்பணிகள் அனைத்தையும் விரைவாக செய்து கொடுத்திடவேண்டும்.

மேலும், திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், தேரோட்டப்பாதையிலுள்ள சாலைகளை சீரமைத்தல் போன்றவற்றை விரைந்து முடித்திடவேண்டும். வரும் 28ம் தேதி மாநில தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழாவினை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிடவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் சுமார் 50பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தனர்.

இதில், மாநகர தலைவர் ரவிக்குமார், மாவட்ட மகளிரணி தலைவி தங்கத்தாய், வட்டார தலைவர்கள் சுந்தரலிங்கம், முரசொலிமாறன், அய்யம்பாண்டி, இளையராஜா, ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் பொன்ராஜா, நகர தலைவர்கள் முருகன், தங்கவேல்ராஜ், பொன்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி சிவனைந்தபெருமாள், நிர்வாகிகள் கணேஷ், அய்யாத்துரை, சந்திரசேகர், முரளிகார்த்திக், ரவிச்சந்திரன், சீனிவாசன், கௌதம், ராஜேஷ், வெள்ளக்கண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here