மாப்பிள்ளையூரணியில் தேங்கிய மழைநீரை துரிதமாக அகற்ற அதிகாரிகளுக்கு சண்முகையா எம்.எல்.ஏ., உத்தரவு

0
121
shanmugaiah mla

தூத்துக்குடி,டிச.16:

மாப்பிள்ளையூரணி பகுதியில் தேங்கிய மழைநீரை துரிதமாக அகற்ற அதிகாரிகளுக்கு சண்முகையா எம்.எல்.ஏ., உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்து வருகிறது. இந்நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதிகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்க பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் மூலமாக அறிந்த சண்முகையா எம்.எல்.ஏ., அப்பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றிட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சண்முகையா எம்.எல்.ஏ., உத்தரவிட்டார். மேலும், மழையின் காரணமாக சேதமான ரோடுகள் மற்றும் பழுதான மின்கம்பங்களையும் மாற்றி அமைத்திட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

ஆய்வின்போது, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், யூனியன் துணை சேர்மன் கோயில்மணி, பி.டி.ஓ., சித்தார்த்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், நவநீதிகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள் பாரதிராஜா, பாண்டியம்மாள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here