ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம்! நாசரேத், ஜூலை.08:

0
30
Screenshot_2019-07-08-16-42-57-625_com.google.android.apps.docs

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உடையார்குளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.; விழிப்புணர்வு முகாமில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தொடக்கி வைத்தார்.அவர் பேசுகையில் நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி,கூடுதலாக பயிர் சாகுபடி செய்து, பயிர் உற்பத்தி அளவை அதிகரிக்கலாம் . எனவே ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் தங்களது நிலத்தில் நுண்ணீர் பாசன முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை தூவுவான் அமைப்பதற்கு அரசின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை அலுவலர் .திருச்செல்வன்;; கூறியதாவது : “ நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா நகல், ஆதார் அட்டை நகல் , வங்கி கணக்கு புத்தக நகல் ,புகைப்படம் – 2 எண் , குடும்ப அட்டை நகல் , மற்றும் அடங்கல்; (சிறு குறு விவசாயிகளாக இருப்பின் சான்று அவசியம்) ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலர் அல்லது துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நுண்ணீர் பாசன இணையத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் தங்க மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்;;  கண்ணன் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிவிஎஸ் சீனிவாசா அறக்கட்டளை சார்பில் சுவாமிநாதன்,ரமேஷ் மற்றும் களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here