’’தற்காலிக பேருந்து நிலையத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றுங்கள்’’ – எம்.எல்.ஏ கீதாஜீவன் கோரிக்கை

0
81
geethajeevan

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி தற்காலிக பேரூந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான பி. கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

“ ஸ்மார்ட் சிட்டி’’ -ஆக தூத்துக்குடியை மாற்ற போகிறோம் என்று சொல்லி மாநகருக்கு தேவையுள்ள அத்தியாவசிய பணிகளான சாலை, மற்றும் வடிகால் வசதிகளை செய்யாமல் நன்றாக இருக்கும் பூங்காக்களையும், மார்க்கெட்டையும் வணிகவளாகத்தையும் அழகுபடுத்தி வருகிறது தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்.

அந்த வகையில் தான் பழைய பேரூந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக அமைக்கப்போகிறோம் என்று சொல்லி பழைய பேரூந்து நிலையத்தை மாற்ற நினைத்த போது எஸ்.ஏ.வி.பள்ளி மைதானம் மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கும் பகுதி அங்கு அமைத்திட வேண்டாம் என்று தி.மு.க.உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் வைத்த கோரிக்கையை சிறிதும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அ.தி.மு.க. வினரின் பேச்சைக் கேட்டு தான்தோன்றித் தனமாக எஸ்.ஏ.வி.பள்ளி மைதானத்திலேயே தற்காலிக பேரூந்து நிலையத்தை அமைத்துவிட்டனர்.

அதனால் இன்று ஏற்பட்டுள்ள நிலை என்ன? தற்காலிக பேரூந்து நிலையத்தில் ஒருவராவது நடந்து செல்ல முடிகிறாதா? பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள்;, பெண்கள், வயதானவர்கள் என தினந்தோறும் சகதியில் வழுக்கி விடுவது வாடிக்கையாகிவிட்டது. பெண்கள் தேங்கி நிற்கும் நீரில் சேலையை முட்டிவரை தூத்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. உண்மையிலேயே அதிகாரிகளும்,

ஆளும் கட்சியினரும் அறிவார்ந்த சிந்தனையோடு செயல்படுகிறார்களா? இல்லையா? என்பதே தெரியவில்லை. ஏற்கனவே பெய்த மழையில் வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரையே மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்ற முடியவில்லை. அங்கு வசிக்கும் மக்கள் பள்ளி மாணவ – மாணவிகள் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீரை கடந்து பேரூந்து நிலையம் வந்தால் அங்கும் இவர்களுக்கு இந்த நிலைமையா? இதை சற்றும் யோசித்து பார்க்க வேண்டாமா நிர்வாகத்தினர்?

எனவே பொதுமக்கள் நலனைக்கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு (ஏன் என்றால் மாநகராட்சி நிர்வாகத்திடம் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்) குறைந்தபட்சம் மழைக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கும் வரை தற்காலிகமாக எஸ்.ஏ.வி.பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள பேரூந்து நிலையத்தை வேறு நல்ல இடத்திற்கு மாற்றி பொதுமக்களை பாதுகாத்திட கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் கீதாஜீவன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here