கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் இன்று டிசம்பர் 22

0
51
raamaanujam

வாழ்வில் கந்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக விளங்குவது கணிதம். உலக நாடுகளுக்கு கணிதத்தில் வழிகாட்டியாக விளங்கியது நமது நாடு. பூஜ்யத்தை முதன் முதலில் உலகிற்கு அறிமுகம் செய்ததும் இந்தியாதான். 20ம் நூற்றாண்டில் கணித மேதை சீனிவாச ராமானுஜம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

உலகின் மிகச் சிறந்தகணித மேதைகளில் ஒருவராக விளங்கியவர் சீனிவாச ராமானுஜம். இவர் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ல் ஈரோட்டில் பிறந்தார். பள்ளி பருவத்திலேயே தனது கணித ஆற்றலால் ஆசிரியர்களை வியக்க வைத்தார். 12 வயதில் கணித நூல்களை நிரூபிக்க முயற்சி செய்தார். கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி அழைப்பை ஏற்று ரமானுஜம் 1914ல் இங்கிலாந்து சென்றார். அவரது திறமை சில நாட்களில் உலகின் கவனத்தை ஈர்த்தது.

இங்கிலாந்து பல்கலை எப்.ஆர்.எஸ்.., பட்டத்தை இவருக்கு வழங்கியது. டிரினிடி கல்லூரி பெல்லோஷிபளிக்கப்பட்டது.1917ல் இவர் இந்தியா திரும்பினார். இவரது பிறந்த நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. கணிதத் துறையில் சாதிக்க விருபும் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டி அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here