தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி அடல் பென்ஷன் யோஜனா கணக்கு தொடங்குவதில் முதலிடம்

0
44
tmb

தூத்துக்குடி,டிச.23:

தனியார் துறை வங்கிகளிலேயே தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி அடல் பென்ஷன் யோஜனா கணக்கு தொடங்குவதில் முதலிடம் பெற்று சாதனை செய்துள்ளது என்று வங்கியின் பொதுமேலாளர் பி.சூரியராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

’’அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குவது இத்திட்டதின் நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் அரசாங்க உத்தரவாத ஓய்வூதியமாக ரூ.1000/ முதல் அதிகபட்சம் ரூ.5,000/ – வரை வழங்கப்படுகிறது. இந்த நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அரசு அனைத்து பொது துறை மற்றும் தனியா வங்கிகளின் மூலம் செயல்படுத்தி வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் PFRDA அனைத்து வங்கிகளின் MD/ED க்காக 02.11.2020 முதல் 12.12.2020 வரை ஒரு சிறப்பு முகாமை (Makers of Excellence 4.0) நடத்தியது.

அதில் அரசாங்கம் நிர்ணயித்த 2500 APY இலக்கை விட கூடுதலாக 371.60% மடங்கு வளர்ச்சியை அளித்து 9290 APY கணக்குகளை பிடித்து அனைத்து தனியார் துறை வக்கிகளுக்கிடையே முதலிடம் பெற்றது.இதன் மூலம் தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி அரசின் அனைத்து நல திட்டங்களிலும் முழு உத்வேகத்துடன் பங்கேற்ற மக்களுக்கு அளவற்ற சேவையை செய்து வருகிறது’’என்றார் பொதுமேலாளர் பி.சூரியராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here