தூத்துக்குடி, டிச.24:
தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் மாநில தலைவர் என்.பி.ராஜா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியிலுள்ள தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் என்.பி.ராஜா கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாசிலாமணிபுரத்திலுள்ள காப்பகத்தினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாநிலத்தலைவர் என்.பி.ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
இதில், தூத்துக்குடி மாவட்ட தலைவர் அமிர்தகாந்தன், மாவட்ட பொருளாளர் சங்கரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கருப்பசாமி, ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி சரவணக்குமார், திருச்செந்தூர் வேல்ச்சாமி, ஸ்ரீவைகுண்டம் ராஜாராம், ஒன்றிய துணைச்செயலாளர்கள் சேசுராஜேந்திரன், சின்னத்துரை, சுரேஷ்பெருமாள், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் உடையார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.