தூத்துக்குடி பர்னிச்சர் விற்பனையாளர் சங்க ஆண்டுவிழா – தொழிலதிபர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் சங்க காலண்டரை வெளியிட்டார்

0
90
sdr news

தூத்துக்குடி,டிச.24:

தூத்துக்குடி மாநகர பர்னிச்சர் விற்பனையாளர்கள் முன்னேற்ற சங்க ஆண்டுவிழாவில் தொழில் அதிபர் எஸ்.டிஆர்.பொன்சீலன் சங்க காலண்டரை வெளியிட்டார்.

தூத்துக்குடி மாநகர பர்னிச்சர் விற்பனையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் 5ம்ஆண்டு விழா பெருமாள்புரம் ரத்னா ஹாலில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தலைவரும், ரத்னா ஏஜென்சி உரிமையாளருமான தர்மராஜ் தலைமை வகித்தார். அமைப்பாளர் ஆனந்தசேகர் வரவேற்றார். ஆலோசகர் சரண்யா சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பவுல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், தூத்துக்குடி அபி நிறுவனங்களின் தலைவர் தொழில் அதிபர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சங்க காலண்டரை வெளியிட்டு உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.சைலஸ்ஜெயமணி, மாநகர வர்த்தக சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி, அரிமா சங்க நிர்வாகிகளான தொழிலதிபர்கள் டி.ஏ.தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், ரத்னா ரவீந்திரன், பொன்ராஜ், சந்திரமணி, வி.வி.ஆர்.துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், சங்க செயலாளர் பி.எஸ்.ராஜான் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here