தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர் சி.த.செல்லப்பாண்டியன். மாவட்டத்தை இரண்டாக பிரித்து வடக்கே கடம்பூர் ராஜூவையும் தெற்கே எஸ்.பி.சண்முகநாதனையும் மாவட்ட செயலாளர் ஆக்கியது தலைமை. அதையொட்டி சி.த.செல்லப்பாண்டியன், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆக்கப்பட்டார்.
இந்த நிலையில் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில், ‘’கட்சி அமைப்பு நிர்வாகிகள் மாற்றப்பட்டு தற்போது முழுமையாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும்போது கட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற்கு நிர்வாகிகள் ஆதரவு வேண்டும். ஆதரவான நிர்வாகிகளிடமிருந்து பொறுப்புக்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
எனவே மாவட்டத்தை மூன்றாக பிரித்து மத்திய மாவட்டத்தின் செயலாளராக சி.த.செல்லப்பாண்டியனை நியமிக வேண்டும். மத்திய மாவட்டத்தொகுதிகளுக்கு மத்திய மாவட்ட செயலாளர்தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 2ம் தேதி வரும் போது 10 ஆயிரம் பேர்களை திரட்டி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்தனர்.