முத்து நகரின் குதூகலம் ”பெரிசன் பிளாசா”

0
65
perison plaza

விலை மதிப்புமிக்க ‘முத்து’க்கு பெயர்போன தூத்துக்குடி மாநகரில் மக்களின் மனதில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் பிடித்துள்ளதுடன், குழந்தைகளின் குதூகலமாகவும், மாநகரின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது ”பெரிசன் பிளாசா”.

சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ளதை போன்ற அதிநவீன வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘ஷாப்பிங் மால்’ தூத்துக்குடி மாநகரில் இல்லையே..? என்ற மக்களின் மனக்குறையை போக்கிடும் வகையில் முத்து மாநகரில் உருவாகியுள்ளது தான் ”பெரிசன் பிளாசா”.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் தூத்துக்குடி டூ எட்டயபுரம் மெயின் ரோடு நான்குமுனை சந்திப்பில் இருந்து போல்பேட்டை செல்லும் பிரதான 60அடி ரோட்டில் அழகு மிளிர, அற்புதமாக அனைத்து வகையான வசதிகளுடனும் அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் வகையில் மாநகரின் அடையாளமாக ”பெரிசன் பிளாசா” அற்புதமாக அமைந்துள்ளது.

பார்த்தாலே பரவசமூட்டும் வகையில் அற்புதமான கட்டிட வடிவமைப்பில் தரைத்தளம் போக மூன்று தளங்களுடன் அழகுற அமைந்துள்ளது பெரிசன் பிளாசா. கட்டிடம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தாலும், வெளியில் இருந்து ஜில்லென்ற தென்றல் காற்றும், சூரிய வெளிச்சமும் கட்டிடத்தின் உள்ளே பரவிடும் வகையில் ”பெரிசன் பிளாசா” கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

பைக், கார் என அனைத்து வாகனங்களையும் சிரமமின்றி, நெரிசல் எதுவும் இல்லாமல் நிறுத்தும் வகையிலான விசாலாமான பார்க்கிங் வசதியுடன் முதன் முறையாக ”பெரிசன் பிளாசா” தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

”பெரிசன் பிளாசா” போனால் என்ன வாங்கலாம்? என்று நினைப்பவர்கள் கூட இங்கு வந்தால் எதனைத்தான் வாங்காமல் செல்ல? என்று எண்ணும் அளவிற்கு அனைத்து வகையான பொருட்களும் இங்கு தரமாக, நியாயமான விலையில் கிடைப்பது முத்து மாநகர் மட்டுமல்ல மாவட்ட மக்களுக்கு எல்லாம் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

”பெரிசன் பிளாசா” போனால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மட்டும் தான் வாங்கலாம் என்றில்லை, பொழுதையும் உள்ளம் மகிழும் வகையில் உற்சாகமாக போக்கிடலாம். ஆம், ”தென் மாவட்டங்களில் முதன் முறையாக ”தூத்துக்குடி பெரிசன் பிளாசா” வளாகத்தில் ”லேசர் தொழில்நுட்ப வசதி”யுடன் திரைப்படங்களை கண்டு குதூகலித்திட இரண்டு திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக திரையரங்குகள் என்றால் இருக்கைகளுக்கு இடையே இடைவெளியே இருக்காது, முன்னால் காலை நீட்டினால் முன் சீட்டு காலில் தட்டும், நடந்து போக கூட சிரமப்படவேண்டும், காற்று சரியாக வராது என்ற நிலை வழக்கத்தில் இருக்கிறது.

ஆனால், பெரிசன் பிளாசா வளாகத்திலுள்ள ”ஸ்கிரீன்-1, ஸ்கிரீன்-2” என்ற இரண்டு மல்டிபிள் திரையரங்குகளில் இந்த நிலை முற்றிலுமாக இல்லை. அந்த அளவிற்கு விசாலமாக, படம் பார்க்க வந்து செல்பவர்கள் மனம் மகிழும் வகையில் அற்புதமாக அழகுற, சொகுசான நெருக்கடி இல்லாத இருக்கைகள், இதயம் வருடும் குளிர்சாதன வசதி என அனைத்து அதிநவீன வசதிகளுடனும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரையரங்குகளில் லேசர் டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்த அதிநவீன டிஜிட்டல் முறை சிஷ்டத்தால் திரைப்படங்களை கண்கள் தெளிவுற, திரைப்படங்களின் இசை, சத்தம் காதுகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்திடாத வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

”ஸ்கிரீன்-1, ஸ்கிரீன்-2” திரையரங்குகளில் டால்பின் டிஜிட்டல் சிஸ்டம் மூலமாக படம் பார்க்கும் போது பாடல்கள் ஒவ்வொன்றும் காதுகளின் உள்ளே ரீங்காரமிடும் வகையில் இருப்பது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். தென்மாவட்டங்களை பொறுத்தவரை இதுபோன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி கொண்ட திரையரங்குகள் தூத்துக்குடி ”பெரிசன் பிளாசா” தவிர வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரிசன் பிளாசாவில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குதற்கான சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், செல்போன் கடைகள் என அனைத்து வகையான பொருட்களையும் வாங்குவதற்கான கடைகள் அமைந்துள்ளன.

மங்கையர்கள் மனம் கவரும் வகையில் பெண்கள் தங்களுக்கு தேவையான உடைகளை வாங்கிடுவதற்கான பிரத்யேக ஷோரூம்கள், பேன்சி பொருட்கள் வாங்கிடுவதற்கான கடைகள், கவரிங் ஷோரூமகள் போன்றவையும் பெரிசன் பிளாசாவில் பெண்களுக்காக அமைந்துள்ளன.

”பெரிசன் பிளாசா” போனோம், படம் பார்த்தோம், பொருட்களை வாங்கினோம், வீட்டுக்கு வந்தோம் என்றில்லாமல் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று சொல்லிடும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான மனதை கொள்ளும் கொள்ளும் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் அங்குள்ள சிறுவர் விளையாட்டு மையத்தில் அதிகளவில் நிறைந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி பெரிசன் பிளாசா உரிமையாளரும், கீதா இன்டர்நேஷனல் ஹோட்டல் உள்ளிட்ட பிரபல தொழில்நிறுவனங்களை நடத்திவரும் முத்து மாநகரின் தொழில் அதிபருமான ஜெகன் பெரியசாமி கூறியதாவது, தூத்துக்குடி மாநகர மக்கள் மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள மக்களின் மனதை கவர்ந்திடும் வகையில் ”பெரிசன் பிளாசா” வளாகத்தினை அற்புதமாக உருவாக்கியுள்ளோம்.

துறைமுகம், ஆன்மிக சிறப்புபெற்ற அனைத்துமத வழிபாட்டு தலங்கள், கடற்கரை, பூங்காங்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ள தூத்துக்குடி மாநகருக்கு சுற்றுலாவாக வந்து செல்லும் அனைவரின் மனதையும் ஈர்க்கும் வகையில் எங்கள் ”பெரிசன் பிளாசா” வளாகம் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

”பெரிசன் பிளாசா” வளாகத்தில் மல்டி பிளக்ஸ் வசதியுடன் கூடிய ”ஸ்கிரீன்-1, ஸ்கிரீன்-2” என இரண்டு திரையரங்குகள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நன்கு விளையாடி பொழுதை போக்கிடும் வகையில் அனைத்து வகையான விளையாட்டு கருவிகளுடன் கூடிய ‘சிறுவர்&சிறுமியர் பொழுதுபோக்கு விளையாட்டு மையம்’ இங்குள்ளது. இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மனதில் எங்களுக்கு தனி இடத்தை பெற்று தந்துள்ளது.

”பெரிசன் பிளாசா போனால் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்கலாம், பொழுதை போக்கி உற்சாகமாகி உள்ளம் மகிழலாம்” என்ற எண்ணம் மக்களிடத்தில் தற்போது எழுந்துள்ளது எங்களது நிறுவனத்திற்கும், எங்களது வளர்ச்சிக்கும் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும் என்றார்.

அப்புறம் என்னங்க நாமும் குடும்பத்தோடு தூத்துக்குடி பெரிசன் பிளாசா போயிட்டு ஜாலியா சந்தோஷமா ஒரு ரவுண்ட் அடித்து மனம் மகிழ்ந்து கை நிறைய பொருட்களுடன் வரலாம் தானே.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here