“எங்கும் எதிலும் எப்போதும் நடுநிலை”

0
196
nadunilai.com

உயிரினங்கள் பூமி என்கிற வட்டத்துக் குள் சுழல்கிறது. அந்த பூமி, நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்து வகையின் தொகுப்பிலானது. அவைகள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இயக்கம் எல்லாம் இவைகளால் மட்டுமே. அதன்படி. உருவாகும் எல்லாமே மற்றொன்றை சார்ந்திருந்தே ஆக வேண்டும்.

அனைத்து வகை உயிரினங்களும் உயிர் வாழ வேண்டும் என்றால், தாவரங்கள் வேண்டும். தாவரங்கள் வேண்டும் என்றால், தண்ணீர் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால், மழை வேண் டும். மழை வேண்டும் என்றால், காற்று வேண்டும். காற்று வேண் டும் என்றால், மரங்கள் வேண்டும். மரங்கள் வேண்டும் என்றால், செடி,கொடியை கொண்ட வனங்கள் வேண்டும்.

வனங்கள் வேண்டும் என்றால், விலங்குகள் வேண்டும். விலங்குகள் வேண்டும் என்றால், , தாவரங்கள் வேண்டும். அந்த தாவரங்கள் வேண்டும் என்றால், நிச்சயமாக அதே மழை நீர் வேண்டும். வாழ்க்கை சுழற்சி என்பது இப்படித் தான் ஒன்றையொன்று சார்ந் திருக்கிறது. இப்படி சார்ந்திருக்கிற, சார்ந்திருக்க வேண்டிய இந்த பூமியில்தான் எத்தனை பிரிவுகள், எத்தனை போராட்டங்கள்..? இந்த சூழ்நிலையில் அனைத்து பிரிவுகளையும் சமமாக நடத்து வதற்கு நடுநிலையாளர்கள் அவசி யம். அதையே நடுநிலை.காம் செய்யப்போகிறது.

உலக நன்மைக்காக அன்பு, பண்பு, தனிமனித ஒழுக்கம், நடுநிலை சிந்தனை உள்ள ‘நடுநிலை நண்பர்கள்’ ஆல் நடுநிலை நியூஸ்-க்கான நடுநிலை.காம் என்கிற இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளம் அறவழியை மட்டுமே ஆதரிக்கும். நூதன போராட்டம் என்கிற பெயரில் ஆசாதாரண நிலையை உருவாக்கு வோரை ஆதரிக்காது. மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கும் ஆளும் கட்சியை ஆதரிக்கு. எதிர்ப்பது மட்டும்தான் எதிர் கட்சியின் வேலை என்பதுபோன்ற அரசியலை ஆதரிக்காது. நியாய மான கோரிக்கையையும், சரியான திட்டத்தையும் ஆதரித்தே ஆகும்.

உண்மையான, தேவையான, மக்களுக்கு பயன் தரக்கூடிய செய்திகள், இதில் இடம்பெறும். எது சரி..? எது தவறு..? எது வேண்டும்..? எது வேண்டாம்..? என்பதை வெளிப்படுத்தும். எழும் கேள்விகள் அத்தனைக்கும் பதில்கள் தரும். பரபரப்புக்காக பண்பாடுகளை உடைக்காது. சமூக அவலங்களை சுட்டிக்காட்டி அதை அகற்ற வலியுறுத்தும். அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படும்.

ஒத்த கருத்துடையோர், அன்பால், பண்பால் ஒன்றுபட்டு செயல்பட விரும்பு வோர், இந்த இணையதளத்தோடு இணையலாம். கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாக்கவும் வளர்க்கவும் உதவும் இந்த இணையதளம், பெண்கள், மருத்துவம், வர்த்தகம், விளையாட்டு, கல்வி, விவசாயம், ஆன்மிகம், அரசு திட்டங்கள் உள்ளிட்ட சகலவிதமான தேவை களுக்கும் வழிகாட்டவும் தயாராக இருக்கிறது. சமன்படுத்த வரும் நடுநிலை.காம் ஐ அனைவரும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.

வாருங்கள், வாழ்த்துங்கள்.! பாருங்கள், பகிருங்கள்.!!

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here