வெள்ளக்காலத்தில் வீறிட்டெழுந்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ சின்னப்பன்!

0
160
admk chinnappan

விளாத்திகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பி.சின்னப்பன், சமீபத்தில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு நேரில் சென்று உதவினார்.

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளையம்மாள்புரம், மந்திகுளம், மீனாட்சிபுரம், கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம் நீர்தேக்க தொட்டி, ஜமீன் செங்கல்படை உள்ளிட்ட பகுதிகளில் நிரம்பும் தருவாயில் இருந்த கண்மாய்கள், தடைபட்டிருந்த சாலைகள், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அனைத்தையும் பார்வையிட்டார்.

இனி வரும் காலங்களில் இதுபோல் வெள்ளநீர் தேங்காத வண்ணம், சாலைகள் அமைத்து தருதல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமமக்கள், எம்.எல்.ஏவிடம் முன் வைத்த னர். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எம்.எல்.ஏ சின்னப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதுபோல் வேம்பார் பகுதியில் உள்ள மீனவ மக்கள் பகுதியில், புரெவி புயல் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ பி.சின்னப்பன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கினார்.

கீழவிளாத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட குறளையம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேங்கிய மழைநீரை, மோட்டார் மூலம் அகற்றிக் கொடுத்தார். ஊசிமேசியாபுரம் கிராமத்தில், மழையின் காரணமாக சாலையில் தேங்கிய மழை நீரை பார்வையிட்டு, அதற்குரிய தடுப்புப் பணிகளை செய்து கொடுத்தார்.

விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளூர் கட்டுமான தேவைக்காக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி, மாட்டு வண்டி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ சின்னப்பனின் முயற்சியால், அவர்களுக்கு தமிழக அரசின் முறையான அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.

வெள்ளாரம் கிராமத்தில் உள்ள பொதுப் பணித்துறைக்கு சொந்தமான குளத்தின் நிலவரம் குறித்து பார்வை யிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

இப்படியாக விளாத்திகுளம் தொகுதி சின்னப்பன் எம்.எல்.ஏ. நாள்தோறும் தொகுதிக்குட்பட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை தவறாமல் செய்து வருகிறார். இவரின் செயலால் தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here