மாப்பிள்ளையூரணி ஜெ.ஜெ. நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்

0
20
WhatsApp Image 2019-07-09 at 5.16.16 PM

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஜெ.ஜெ. நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் திருக்கோவில் கும்பாபிஷேக பூஜை ஆரம்பமானது. பின்னர் மாலை தாளமுத்துநகர் செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து திருக்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து முதல்யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதையொட்டி இரண்டாம், மூன்றாம், நான்குகால யாகசாலை சிறப்பு பூஜையுடன் வியாழக்கிழமை காலை மகா கும்பாபிஷேகத்தை அரிகர சுப்பிரமணிய பட்டர் நடத்தி வைக்கிறார். அதன் பின்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைக்கு பின்னர் மதியம் அன்னதானம் நடைபெற்று பின்னர் மாலை அங்காள பரமேஸ்வரி அம்பாள் சப்பரபவனி நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பணிகளை கோவில் செயலாளர் அஜய்கோஸ், துணை செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் அழகுமுருகன், மொட்டையசாமி, கருப்பசாமி, பரமசிவம், மூக்காண்டி முருகேசன், முனியசாமி, மாரியப்பன், அழகுலிங்கம், சுப்பிரமணியன், சுடலை கோனார், சிவன்வேல், மாரியப்பன், காமாட்சி, பத்ரகாளி, ஜெயலட்சுமி, கணேசன், செல்வி, மாரியப்பன், கன்னியம்மாள், தங்கராஜ், மாரிமுத்து, ராம், ராமர், கணேசன், சம்பத்லிங்கம், சுடலைமணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேக விழாவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் சரவணக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், திமுக கிளை செயலாளர் கணேசன், கோவில்மணி, மக்கள் நீதி மய்யம் கிழக்கு பகுதி செயலாளர் ஜவஹர், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் வார்டு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால்ராஜ்,அதிமுக பிரமுகர் பிரபாகரன், கீதாமாரியப்பன், சுப்பையா உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here