மோடி பாராட்டிய சலூன் கடைக்கு 50புத்தகங்களை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார் !

0
42
kamalhasan

தூத்துக்குடி, டிச.31:

தூத்துக்குடி மில்லர்புரத்தில் பொன்மாரியப்பன் என்பவர் சலூன் கடையில் ஏராளமான புத்தகங்களை வைத்து நூலகத்துடனான சலூன் கடை போன்று நடத்தி வருகிறார். இதனை பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இதனை அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமலஹாசன் கடந்த மாதம் தூத்துக்குடி வந்தபோது இந்த சலூன் கடைக்காரரை நேரில் சென்று பாராட்டினார். அதோடு கடைக்கு அன்பளிப்பாக புத்தகங்கள் தருவதாக கூறி சென்றார்.

இதன்படி நடிகர் கமலஹாசன் அனுப்பி வைத்த 50புத்தகங்களை பொன்மாரியப்பனிடம் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வழங்கினார்.

இதில், நகர செயலாளர்கள் முருகன், மங்கள்ராஜ், நற்பணி அணி செயலாளர் அக்பர், தொழிலாளர்நல அணி செயலாளர் ராஜா, ஆதிதிராவிடர் நலஅணி செயலாளர் சாமிகண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here