நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்தார்.
வருகிற 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு (23.12.2019) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்குகள் எண்ணும் மையமான வாகைக்குளம் புனித அன்னை தெரஸா பொறியியல் கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கான் வாக்கு எண்ணும் மையமான சாயர்புரம் போப்ஸ் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான செய்துங்கநல்லூர் புனித சவேரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.