காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்துள்ளது – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்

0
51
s.p

தூத்துக்குடி,டிச.31:

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் என தெரிவித்திருக்கிறார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது :-

குண்டர் தடுப்புச் சட்டம் :

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இன்று வரை பாலியல் குற்றவாளிகள் 19 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர் உட்பட 128 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு 77 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 51 பேர் கூடுதலாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்குகள் :

இந்த ஆண்டு இன்று வரை 58 கொலை வழக்குகள் பதிவாகி அனைத்து வழக்குளிலும் மொத்தம் 180 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 72 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்:

இந்த ஆண்டு கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 443 வழக்குளில் 225 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 1,64,89,960/- ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்குகள் :

இந்த ஆண்டில் போதை தடுப்பு குற்றத்தில் 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 61,35,110/- (அறுபத்து ஒரு லட்சத்து முப்பத்து ஐயாயிரத்து நூற்றி பத்து) மதிப்புள்ள 25 கிலோ சரஸ் என்னும் போதைப்பொருள் உட்பட 134 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 3,99,750/- மதிப்புள்ள ( மூன்று லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து எழுநூற்று ஐம்பது) 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த ஆண்டு 95 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகையிலைப்பொருட்கள் :

இந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 841 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 58,54,396/- மதிப்புள்ள 9587 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 15,87,984/- மதிப்புள்ள 2358 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த ஆண்டு 327 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு :

இந்த ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 159 எதிரிகள் கைது செய்யப்பட்டு 187 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 223 எதிரிகள் கைது செய்யப்பட்டு 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இந்த ஆண்டு 7 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு, இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.

சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்து மரணங்கள் :

இந்த ஆண்டு 233 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1004 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 252 பேர் மரணமடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு 272 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1217 வழக்குகள் பதிவாகியுள்ளன, இவற்றில் 303 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, இந்த ஆண்டு 39 அபாயகரமான சாலை விபத்துக்கள் உட்பட 213 சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ன. சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 51 சாலை விபத்து உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.

நாளை பிறக்க உள்ள புத்தாண்டிலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றம் மற்றும் சாலை விபத்துக்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கரையுடன் செயல்படும் என்பதுடன் பொது மக்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here