ஸ்ட்ரெச்சரில் வந்து ஆஜரான ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

0
11
201907091723167643_Arriving-at-the-stretcher-The-king-RajagopalaiOrdered-to_SECVPF.gif

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்சில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார். ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்ட்ரெச்சரில் வந்து  ஆஜரான ராஜகோபாலை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஜனார்த்தனன் இன்று ஆம்புலன்சில் வந்து ஆஜரானார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சாந்தகுமார் கொலை வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை  பெற்றவர் ஜனார்த்தனன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here